ஜெய்ஸ்ரீராம்; அயோத்தியில் அதிகாலை ஆரத்தி.. பக்தர்கள் பரவசம்
ADDED :585 days ago
அயோத்தி; அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்த தினம் முதல் தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசித்து வருகின்றனர். இன்று சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமானோர் அதிகாலை முதல் வழிபட்டு வருகின்றனர்.
பங்குனி சனிக்கிழமையை இன்று அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, ஆரத்தி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலராமரின் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். இன்று அதிகாலை முதல் ராமரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு யாத்ரீகருக்கும் தடையற்ற மற்றும் விரைவான தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஸ்ரீ ராம் லல்லாவை அமைதியாக நீ்ண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.