காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்; பஞ்சமூர்த்திகள் வீதியுலா
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீகைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகை உடனமர் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. ஸ்ரீகைலாசநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.கடந்த 19ம் தேதி தெருவடைச்சான் சப்பரம் நடந்தது.நேற்று திருக்கல்யாண உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.பின்னர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஸ்ரீகைலாசநாதர்,ஸ்ரீசுந்தராம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சி இன்று 23ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.