பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் அன்னாபிஷேக விழா!
ADDED :4800 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில், உலக நன்மைக்காக, அன்னாபிஷேக அலங்காரம் நடந்தது. ஸ்வாமி, காய்கறி மற்றும் பழவகை சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உறையூர் சுந்தரவடிவேல் ஓதுவார் மற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சாமதேவன் ஓதுவார் ஆகியோர், இசைக் கருவிகளுடன் திருமுறை இன்னிசை கச்சேரி வாசித்தனர். திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.