திருமலைக்கேணியில் பங்குனி உத்திர விழா; விளக்கேற்றி தரிசனம் செய்த பக்தர்கள்
ADDED :775 days ago
நத்தம், நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.சுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதைபோலவே நத்தம் கோவில்பட்டியில் கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.