உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால்பிரவு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

கால்பிரவு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

மானாமதுரை; மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தில் உள்ள செல்வமுருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கால்பிரவு கிராமத்தில் உள்ள செல்வமுருகன் கோயிலில் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை காலை 6.20 மணிக்கு கோமங்கள் வளர்க்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் சுப்ரமணியர் மூல மந்திரம் காயத்ரி ஜெப ஹோமம் நடைபெற்றது இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.பின்னர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது.மாலை உற்சவர் சுவாமிகள் மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் கால்பிரவு மற்றும் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஏ.ஆர்.பி., முருகேசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !