உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் குறையாத பக்தர்கள் கூட்டம்; அரோகரா கோஷத்துடன் பரவசம்

பழநியில் குறையாத பக்தர்கள் கூட்டம்; அரோகரா கோஷத்துடன் பரவசம்

பழநி; பழநியில், பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.

பழநியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. பழநி கோயிலில் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பல நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி நதியில் இருந்து தீர்த்த கலசங்களுடன் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். சந்தன காவடி, இளநீர் காவடி, பால் காவடி, உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். அடிவாரம் கிரிவீதி பகுதிகளில் அலகு குத்தி, காவடி எடுத்து மேளதாளத்துடன், அரோகரா கோஷத்துடன் காவடியாட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் ஆடி கிரி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !