மஞ்சமலை முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :638 days ago
பாலமேடு; பாலமேடு அருகே மறவபட்டியில் மஞ்சமலை, முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா 5 நாட்கள் நடந்தது.தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அழகுகுத்தி, அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொழிலதிபர் பாண்டியன் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சர்வ அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கிராமத்தினஎ செய்திருந்தனர்.