உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாத்துக்குடி சபாவில் உலக நன்மைக்காக ஹோமம்

துாத்துக்குடி சபாவில் உலக நன்மைக்காக ஹோமம்

துாத்துக்குடி; உலக நன்மை மற்றும் மழைவளம் வேண்டி, மஹா ருத்ர ஹோமம் துாத்துக்குடி எஸ்.வி.எஸ்.கே. சபாவில் நடந்தது. துாத்துக்குடி, தெப்பக்குளம் அருகே உள்ள, எஸ்.வி.எஸ்.கே.சபாவில், கடந்த 25ம் தேதி மஹாகணபதி பூஜையுடன் 22ம் ஆண்டு மஹாருத்ர ஹோமம் துவங்கியது. 26ம் தேதி கலச பூஜை, தேவி ஆராதனம் நடைபெற்றன. 27ம் தேதி ஆரத்தி, ஸ்ரீருத்ர க்ரம அர்ச்சனை நடந்தன. இறுதி நாளான நேற்று, காலை 6:00 மணி முதல் வஸோர்த்தாரா அபிஷேகம் நடைபெற்றன. பூஜைகளை கோபாலகிருஷ்ண வாஜபேயி முன்னிலையில், ரங்கநாதன் தலைமை வகித்து நடத்தினார். அவர்களுடன், 45 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, சிவஆராதனை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். சபா தலைவர் ஆடிட்டர் கிச்சா, செயலாளர் பாலாஜி, உதவிசெயலாளர் குருமூர்த்தி, செயற்குழு உறுப்பின்கள் ஆடிட்டர் ரவி, தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !