காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா
ADDED :560 days ago
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று சங்கட ஹர சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதப் பூஜையில் காலையும் மாலையும் ஈடுபட்டனர். தொடர்ந்து விநாயகர் (உற்சவ மூர்த்தி) மூஷிக வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது இதில் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷு மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.