பழநியில் தீர்த்த காவடியுடன் வந்த காளைகள்
ADDED :560 days ago
பழநி; பழநியில் காளைகளை அலங்காரத்துடன் பக்தர்கள் அழைத்து வந்தனர்.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பாதயாத்திரை ஆக வந்த பக்தர்களுடன் முருகனுக்கு நேர்ந்துவிடப்பட்ட நாட்டு காளைகளை மலர்களால் அலங்கரித்து தீர்த்தகாவடியுடன் அழைத்து வந்தனர். இந்த காளைகளுக்கு எந்த வித விவசாய மற்றும் போக்குவரத்து வேலைகள் அளிப்பதில்லை. காளைகள், பழநி முருகனுக்காக நேர்ந்து விடபட்டவை என காளைகளை அழைத்து வந்தவர்கள் தெரிவித்தனர்.