உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடகரை பகவதி அம்மன் கோயிலில் மறுபூஜை

வடகரை பகவதி அம்மன் கோயிலில் மறுபூஜை

பெரியகுளம்; வடகரை பகவதி அம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர். பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாத சுவாமி கோயிலின் உப கோயிலான பகவதி அம்மன் கோயில், ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது.‌ வடகரையில் உள்ளது. இக்கோயிலில் மார்ச் 18ல் திருவிழா துவங்கியது. மார்ச் 27 வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது. இன்று மறுபூஜையை முன்னிட்டு ‌ ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை பூஜாரி திலகர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.‌


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !