பூதமங்கலம் பெருமாள் கோவிலில் பங்குனி தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
ADDED :572 days ago
திருவண்ணாமலை; கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் பெருமாள் கோவிலில் நடந்த பங்குனி மாத தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்புஜவல்லி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மாத தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது, முன்னதாக அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு பால், தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து 52 அடி உயரம் கொண்ட மரத்தேரில் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் எழுந்தருள தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.