உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் உலா

சிறப்பு அலங்காரத்தில் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் உலா

திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !