உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

சூலூர்; சூலூர் மார்க்கெட் ரோடு வடக்கு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு,கடந்த, 19 ம்தேதி சாமி சாட்டுதலுடன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது. 26 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 29 ம்தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, நொய்யல் ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக அழைத்து வந்து, மாரியம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை, பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !