உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறந்த எதிர்காலத்திற்கு பக்தியும் இயற்கையும் இணைந்த கல்வி அவசியம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

சிறந்த எதிர்காலத்திற்கு பக்தியும் இயற்கையும் இணைந்த கல்வி அவசியம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சிபுரம்; நவீன கால சூழ்நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமைய பக்தியும், இயற்கையும் இணைந்த கல்வி அவசியம் என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.நேற்று காஞ்சிபுரம் சங்கர மடம் வந்த ஜெயின் பெண் துறவிகள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திதனர். அவர்கள் சுவாமியுடம் இந்தியா முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம், பசுக்களை பாதுகாத்தல், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறிவருவதாக தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நவீன கால சூழ்நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமைய பக்தியும், இயற்கையும் இணைந்த கல்வி அவசியம் இதனால் தீவிரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும். இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !