உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி தீர்த்தவாரி உற்சவம்

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி தீர்த்தவாரி உற்சவம்

திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. திருவிழா நாட்களில் நாள்தோறும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 10ம் நாளான நேற்று முன் தினம் காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. 11ம் திருநாளான நேற்று காலை நம்பியாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அழகியநம்பிராயர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் வைஷ்ணவர்களுக்கு விடைசாதித்தல் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !