உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

பழநியில் பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

பழநி; பழநியில், விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. ரோப்கார், வின்ச் வரிசையில் கூட்டம் அதிகம் இருந்தது. கோயிலில் காலை முதல் தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பல நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்த கலசங்களுடன் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். அடிவாரம், கிரிவலப் பாதையில் வாகனங்களை அனுமதிக்காததால் கிரி விதி பாதைகளுக்கு நடந்து செல்லும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி சாலை ஆகியவற்றில் வாகனங்களில் நிறுத்தி இருந்ததால் இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !