/
கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் சித்திரை திருவிழா; தல்லாகுளத்தில் கொட்டகை முகூர்த்தத்துடன் துவக்கம்
அழகர்கோவில் சித்திரை திருவிழா; தல்லாகுளத்தில் கொட்டகை முகூர்த்தத்துடன் துவக்கம்
ADDED :629 days ago
மதுரை; அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் சித்திரை திருவிழாவிற்கான கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு தலையலங்காரம் நிகழ்ச்சி தொடங்கியது.
உலக பிரசதிபெற்ற மதுரை அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் சித்திரை திருவிழாவிற்கான கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு தலை யலங்காரம் நிகழ்ச்சியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்குள் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.