வெங்கடேச பெருமாள் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி; பக்தர்கள் பரவசம்
ADDED :629 days ago
மதுரை; விளாச்சேரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பூமி, நிலா சமேத வெங்கடேஷ்வர பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மூலவர்கள் மேல் சூரியஒளி பரவும் நிகழ்வு நடைபெறும். இந்தாண்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. மூலவர் பெருமாள் மீது பட்ட சூரியஒளியை கண்டு பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.