ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாய் நோட்டு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்
ADDED :623 days ago
கோவை; காட்டூர் தொட்ராயன் கோவில் வீதி மணி முத்துமாரியம்மன் கோவில் 48ம் ஆண்டு உற்சவ விழா நடந்து வருகிறது. இதில் ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்களுடன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.