கோவை கருமாரியம்மன் கோவில் விழா; பக்தர்கள் பரவசம்
ADDED :616 days ago
கோவை, கோவை, சிவானந்த காலனி காந்தி நகரில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உற்சவ விழா நடந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கிய விழாவில் அக்கினி கம்பம் நட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றினர். இன்று நடந்த நிகழ்வில் பக்தர்கள் சக்தி கரகம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம் வந்தனர். பின் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியின் முடிவில் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.