அனுவாவி சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :600 days ago
கோவை; சின்ன தடாகம் அருகே உள்ள மலை மேல் அமர்ந்திருக்கும் அனுவாவி சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி கார்த்திகை விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.