உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா; ஏப்.,16ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை

சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா; ஏப்.,16ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தினமும்  பல்வேறு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்.16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !