திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
ADDED :557 days ago
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீசோபகிருது ஆண்டில் இருந்து குரோதி ஆண்டு பிறந்தது. தமிழ்ப் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.