உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து வழிபாடு

திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து வழிபாடு

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர். இக்கோயிலில் பங்குனி மாத பெருவிழா ஏப். 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு  மேல தெரு இளைஞர் மன்றம் மற்றும்  வைராவிகள் மண்டகப்படியை முன்னிட்டு உற்சவர் அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து அம்மன் மங்கல வாத்தியங்களுடன்  திருவீதி உலா நடந்தது.  பெண்கள் நவதானியங்கள் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு  சமர்ப்பித்து  வழிபட்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !