உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் மூலவர் மீது சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம்

அண்ணாமலையார் மூலவர் மீது சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை ; தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் நேர்அண்ணாமலையார் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சம்பந்த விநாயகர் சன்னதி முன், சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை வாசித்தனர்.கோவிலில், மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் தங்கத்தேரில்    பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசன்ம செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !