உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு; தமிழக அரசியலில் மாற்றம்.. உலகில் இந்தியா முதலிடம்..!

ராமேஸ்வரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு; தமிழக அரசியலில் மாற்றம்.. உலகில் இந்தியா முதலிடம்..!

ராமேஸ்வரம்; உலக அளவில் இந்தியா முதலிடம் பிடிக்கும். தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என ராமேஸ்வரம் கோயில் குருக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளதை வாசித்தார்.

இன்று தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளினர். பின் பக்தர்களுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்ததும் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின் கோயில் ரத வீதியில் சுவாமி அம்மன் ஊர்வலம் வந்து கோயிலுக்கு சென்றனர்.

பின் கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார். இதில், இந்தியாவில் அதிக மழையால் விவசாயம் செழிக்கும். அதேசமயம் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு பாதிப்பும் ஏற்படும். மத்திய அரசு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துறையில் சாதனை புரிந்து, இந்திய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதிப்பார்கள். இதன்மூலம் உலக அரங்கில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைக்கும். அரசியலில் மாற்றம் ஏற்படும். அரசியலில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் மேலும் விரிவடையும்.

இந்திய விளையாட்டு வீரர்கள் மேலும் சாதனை படைப்பார்கள். போதை பொருள் புழக்கம் மேலும் அதிகரிக்க கூடும். கல்வி கட்டணம் உயரும், அதே சமயம் கல்வி சுமையும் குறையும். எல்லையில் போர் பதட்டம் இருக்கும். முன்னாள் அரசியல் தலைவர்களுக்கு பிரச்சனை ஏற்படும். அரசியல் கூட்டணி மாறுபாடும். அரசியல்வாதிகள் புதிய வழக்கில் சிக்குவார்கள். புதிய வரி உயர்வு குறிப்பாக மின்கட்டணம் மேலும் அதிகரிக்க கூடும். உலக அளவில் புதிய கொடிய நோய் பரவ வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். இதில் கோயில் செயல் அலுவலர் முத்துச்சாமி, மேலாளர் பாண்டியன், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !