ஐராவதீஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய வழிபாடு; பக்தர்கள் பரவசம்
ADDED :620 days ago
மதுரை; ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோயிலில் இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சித்திரை மற்றும் ஆடி மாத பிரதோஷ தினங்களில் கருவறைக்கு நேரே சூரியனின் ஒளிபடுவது, சூரியபகவானே நேரடியாக வந்து அபிஷேகிப்பது போன்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளில் சூரியன் நேர் கோட்டுக்கு வரும். மேற்கு நோக்கி அமைந்துள்ள உசிலம்பட்டி ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் அஸ்தமன சூரியனின் கதிர்கள் சுவாமி மீது விழும் காட்சி நேற்று நடைபெற்றது. இதைக்கண்ட பக்தர்கள் பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.