சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :671 days ago
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு காலை சுவாமி, தேவியர்களுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுவாமி சப்பரங்களில் ரத வீதியில் உலா வந்து, கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். மகளிரணி நிர்வாகிகள் சவுந்தரியம்மாள், லலிதா தலைமையில் திருமண சீர்வரிசையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.