நந்திகேஸ்வரர் வாகனத்தில் வீதி உலா வந்த சந்திரசேகர சுவாமி
ADDED :545 days ago
பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் நந்திகேஸ்வரர் வாகனத்தில் சந்திரசேகர சுவாமி வீதி உலா வந்தார். பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் ஏப்.,14 துவங்கி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடக்கிறது. தினமும் சந்திரசேகர சுவாமி பிரியா விடையுடன் நந்திகேஸ்வரர், குண்டோதரன், கைலாச கற்பக விருட்சம், ராவண கைலாசம், ரிஷபம், குதிரை வாகனங்களில் அருள்பாலிக்கிறார். இதேபோல் விசாலாட்சி அம்மன் கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, ரிஷபம், குதிரை வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி வலம் செல்கிறார். ஏப்.,21 திருக்கல்யாணமும், ஏப்.,22 சித்திரை தேரோட்டமும் நடக்கிறது.