செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரம்
ADDED :873 days ago
செஞ்சி; செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ராம நவமியை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்திருந்தனர். செஞ்சி கோட்டை வீர ஆஞ்ச நேயருக்கு நேற்று காலை ராம நமவியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். காலை 11 மணிக்கு சிறப்பு பஜனையும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.