சேவூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் ராம நவமி விழா
ADDED :541 days ago
அவிநாசி; சேவூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் 38 ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி விழா நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் 38ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி விழா நேற்று காலை சகஸ்ர நாம பாராயணத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை மஹா தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.