ஷீரடி சாய்பாபா ஜெயந்தி பூஜை
ADDED :541 days ago
தேவகோட்டை; தேவகோட்டை ஷீரடி சாய்பாபா கோவிலில் ஷீரடி சாய்பாபா ஜெயந்தி நாளை முன்னிட்டு சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் பூஜைகள் நடந்தன. நேற்று இரவு ஷீரடி சாய்பாபா உற்சவர் தங்க ரதத்தில் வீற்றிருக்க பக்தர்கள் சாய்ராம் கோஷமிட்டு இழுத்தனர். மூலவருக்கும் உற்சவருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை கள் நடந்தன. கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்