உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கிரிவலம் வந்த கோயில் காளை

பழநியில் கிரிவலம் வந்த கோயில் காளை

பழநி; பழநியில் கோயில் காளை அலங்காரத்துடன் பக்தர்கள் கிரிவலப் பாதையில் அழைத்து வந்தனர்.

பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழநி அருகே மேல்கரைப் பட்டியைச் சேர்ந்த தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பாதயாத்திரை ஆக வந்த மேல்கரைப்பட்டி குமரப்ப சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரி வீதி வலம் வந்தனர். பாதயாத்திரை வந்த பக்தர்கள் மலைக்கோயில் தரிசனம் செய்து திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !