உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அற்புதம் அவன் மகிமை அரும்பொருளே ஸ்ரீ ராமனே.. அயோத்தி ராமர் அபிஷேகத்தில் பக்தர்கள் பரவசம்

அற்புதம் அவன் மகிமை அரும்பொருளே ஸ்ரீ ராமனே.. அயோத்தி ராமர் அபிஷேகத்தில் பக்தர்கள் பரவசம்

அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ராம நவமி, இதில் பகவான் ஸ்ரீ ராமரின் சூரிய திலகத்தின் தெய்வீக சந்தர்ப்பமும் வந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்கள் இந்த அற்புதமான தருணத்தை  கண்டு பரவசமடைந்தனர்.

அயோத்தியில்  நேற்று 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வந்தனர். ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காரின் திவ்ய அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. இதை உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்கள் கண்டு பரவச தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !