ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு அபிஷேகம்; ஆரத்தி பூஜை
ADDED :542 days ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று ஸ்ரீ சீரடி சாய்பாபா காலை ஆரத்தி, குழந்தை வரம் வேண்டி ஊஞ்சல் சேவை, பால் அபிஷேகம், கூட்டு வழிபாடு, மதிய ஆரத்தி, இரவு ஆரத்தி நடந்தது. நாள் முழுவதும் சிறப்பு அலங்காரத்துடன் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.