சித்தி புத்தி விநாயகர் கோவிலில் மழை வேண்டி ஐந்து நாட்கள் மகா வருண ஜபம்
ADDED :631 days ago
சூலூர்; உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் ஊத்துப்பாளையத்தில், ஐந்து நாட்கள் வருண ஜபம் துவங்கியது.
அரசூர் ஊராட்சி, ஊத்துப்பாளையம் சித்தி புத்தி விநாயகர் கோவிலில், ஜெய்ஹிந்த் பாரத பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி, ஐந்து நாட்கள் வருண ஜபம் மற்றும் ஹோமம் நேற்று துவங்கியது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜையில், காலை,8:00 முதல், 11:30, மாலை, 5:00 முதல், 8:00 மணி வரை மகா வருண ஜபம் மற்றும் மூலமந்திர ஹோமம் நடந்தது. வரும், 25 ம்தேதி வரை காலை மற்றும் மாலை என, இரு காலங்கள் நடக்கிறது. தினமும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.