உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையின் குலதெய்வம்; தண்டு மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கோவையின் குலதெய்வம்; தண்டு மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரதில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !