உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐயில் மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்!

3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐயில் மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதி; அக்டோபர் 7, 2023 முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. அதன் பிறகும் பக்தர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். திருப்பதி தேவஸ்தானம், ரிசர்வ் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நோட்டுகளை மாற்றக் கோரியது. அதன்படி, 2023 அக்டோபர் 8 முதல் 2024 மார்ச் 22 வரை ஐந்து தவணைகளில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐயில் திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !