உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உடுமலை பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

உடுமலை பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முன்னதாக முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து புனித தீர்த்த குடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலஸ்தான கலசத்திற்கு சிவச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !