திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி அம்பாள் தரிசித்தால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவாக தெப்போற்சவாம் நேற்று இரவு நடந்தது. அதையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளின மகா தீபாராதனையுடன் கோவில் தீர்த்த குளத்தில் மூன்றுமுறை தெப்பம் வளம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி, உள்துறை சூப்பிரண்டு விருதகிரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.