திருப்பதியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தரிசனம்
ADDED :603 days ago
திருப்பதி; துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் இன்று ஏப்ரல் 26ம் தேதி திருப்பதி மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு சென்றார். திருப்பதி வந்த துணை ஜனாதிபதி திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் பிரார்த்தனை செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருப்பதியில் நடைபெறும் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.