உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் திருவிழா; தேர்களுக்கு முகூர்த்தக்கால்

வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் திருவிழா; தேர்களுக்கு முகூர்த்தக்கால்

திருப்பூர்; வைகாசி விசாகத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர்களுக்கு நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி தேர்த்திருவிழா, மே 17ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, தேர்கூடாரம் பிரித்து, தேர்கள் செப்பனிடப்பட்டன. தேர்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. சிவாச்சார்யார்களும், பட்டாச்சார்யார்களும், வேத ஆகம விதிகளின்படி, பூஜைகள் செய்து, தேரில் முகூர்த்தக்கால் நட்டனர். கோவில் அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் பூஜைகள் நடந்தன. வரும் மே 18 முதல், தினசரி கட்டளை பூஜைகளும், 22ல் திருக்கல்யாணம், 23 மற்றும் 24ம் தேதிகளில், தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !