கம்பம் கோயில் பட்டத்துக்காரராக 7 வயது சிறுவன் தேர்வு
ADDED :561 days ago
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு சொந்தமானது.
இக்கோவிலில் கோடியப்பனார், பூசாரியப்பனார், பெரிய மனைக்காரர், பட்டத்துக்காரர் என்ற நான்கு பதவிகளில் இருப்பவர்கள், கடவுளின் குழந்தைகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் கோவிலை நிர்வகிப்பர். இவர்கள் எந்த ஒரு துக்க நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள். இந்த நால்வரில் பட்டத்துக்காரர் சமீபத்தில் இறந்து விட்டார். இதனால் புதிய பட்டத்துக்காரரை தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோடியப்ப கவுடர் மீது அருள் வந்து, ஆனந்தகுமார் மகன் 7 வயது சிறுவனான ஆதவன் கழுத்தில் மாலை போட்டார். இதனால் ஆவுலு கவுடர் வகையறாவில் இருந்து இந்த சிறுவன் பட்டத்துக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.