கோவைபுதூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா; பக்தர்கள் பரவசம்
ADDED :642 days ago
கோவைபுதூர்; ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
கோவைபுதூர் பத்ரகாளியம்மன் கோவில் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் குண்டம் இறங்க, கோவைபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்கள் வரிசையின் நின்று அம்மன் கோஷத்துடன் குண்டம் இறங்கினர்.