பட்டாபிஷேக ராமர் கோயிலில் சீதா ராமர் கல்யாணம்
ADDED :561 days ago
காரியாபட்டி; காரியாபட்டி அச்சங்குளம் கிராமத்தில் பட்டாபிஷேக ராமர் கோயில் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் சீதா ராமர் கல்யாண வைபவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து திருமண சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன. நேற்று காலை சீதா ராமர் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டன. உடன் சீதாராமரை வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன, தென்காசி கடையநல்லூர் ஹரி நாம பஜன் மண்டலி பாகவதாள் குழுவினரால், சுந்தரகணபதி ஐயர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைத்தனர். தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அச்சங்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.