உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டுக்குடிப்பட்டியில் பேத்தப்பன் விரட்டு திருவிழா

கட்டுக்குடிப்பட்டியில் பேத்தப்பன் விரட்டு திருவிழா

எஸ்.புதூர்; எஸ்.புதூர் அருகே கட்டுக்குடிப்பட்டியில் பூச்சொரிதலையொட்டி பேத்தப்பன் விரட்டு திருவிழா நடந்தது.

இங்குள்ள செல்வவிநாயகர், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா 2 நாட்கள் நடந்தது. விழா நிறைவாக நேற்று மாலை 5:45 மணிக்கு பாரம்பரியமான பேத்தப்பன் திருவிழா நடந்தது. ஊர் மந்தையில் இருந்து பேத்தப்பன் மகாராஜா வேடமணிந்தவரை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோயிலில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டு திருஷ்டி கழிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிராம இளைஞர்கள் பேத்தப்பனை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலை சுற்றி பேத்தப்பனை இளைஞர்களும், இளைஞர்களை பேத்தப்பனும் விரட்டி விளையாண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டுக்குடிப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !