உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் சுவாமி தரிசனம்

சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் சுவாமி தரிசனம்

செந்துறை, செந்துரை அருகே சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் அருகே சேத்தூரில் உள்ள செல்லமுத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 21-ந்தேதி கரந்தமலை அய்யானார் கோவில் சென்று தீர்த்தம் ஆடி அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமி கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், கிடாய் வெட்டுதல்,படுகளம், அங்கப்பிரதட்சனம் செய்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை சேத்தூர் ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !