உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னானி முத்துமாரியம்மன் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

பொன்னானி முத்துமாரியம்மன் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானியில் மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டி சார்பில் வெண்கலத்தில் ஆன புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இதன் பிரதிஷ்டை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக நேற்று பொன்னானி ஆற்றங்கரையில் இருந்து, பக்தர்கள் பங்கேற்ற புனித நீர் கொண்டுவரும் ஊர்வலம் நடந்தது. இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் கமிட்டி தலைவர் பிரபாகரன் தலைமையில், புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் தெளித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் பிரபாகரன், சிவமயம், கலைசெல்வன் ஆகியோர் தலைமையிலான கமிட்டி நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !