மருநூத்தில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ADDED :560 days ago
சாணார்பட்டி.சாணார்பட்டி அருகே மருநூத்தில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
வரலாறு காணாத கடுமையான கோடை வெயிலின் காரணமாக முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வெயிலின் காரணமாக நீர்நிலைகளில் வறட்சி ஏற்பட்டு விவசாயிகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் மழை வரம் வேண்டி மருநூத்து மந்தை குளத்தில் ஜமாத்தார்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.இதில் மருநூத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் ஜமால் முகமது,கனி என்ற உசேன் மீரா,சாதிக் அலி,சேக் இஸ்மாயில்,ஜபருல்லா உள்ளிட்ட ஜமாத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.